நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது.
மேலும் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். என்று மத்திய அரசுக்கும் , உத்தரபிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.அதன் பிறகு அதை மறுத்தும் சில செய்திகள் வெளியாகின தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என பல உறுப்பினர்கள் கூறியதால் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…