மோடி பெயரில் வந்த ஆட்டை வாங்க போட்டி! 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது!

மஹாராஷ்டிராவில், மோடியின் பெயரில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆட்டிற்கு போட்டி போட்ட வியாபாரிகள். 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது.
மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஆட்பாடி கால்நடை சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும். இங்கு கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த சந்தை கூடியது. இதில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபு ராவ் என்பவர் இந்த சந்தைக்கு தனது ஆட்டை விற்பதற்காக கொண்டு வந்தார்.
அந்த ஆட்டிற்கு மோடி எனப் பெயர் சூட்டியுள்ளார். பிங்க் வண்ணம் பூசப்பட்ட அந்த ஆட்டுக்கு, சந்தையின் அனைத்து வியாபாரிகளும் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். ஆட்டை ஏலம் விட்டதும் பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டு, அதிகபட்சமாக 70 லட்சம் வரையிலும் கேட்கப்பட்டது. ஆனால், ஆட்டின் உரிமையாளர் பாபு ராவ் 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது என கூறிவிட்டார். எழுபதுக்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால், உரிமையாளர் அதனை மீண்டும் அழைத்துச் சென்று விட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025