கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம்- இந்திய போட்டி ஆணையம்.!
கூகுள் நிறுவனத்திற்கு, இந்திய போட்டி ஆணையம் (CCI) போட்டி சட்டத்தை மீறியதற்காக ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் படி, ஆண்ட்ராய்டு மொபைல் சாதன தயாரிப்பாளர்களிடம் கூகுள் நிறுவனம், தனது கூகுள் ஆப்ஸ்களை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யும் படியான நியாயமற்ற நிபந்தனையை விதிக்கிறது.
இதன்மூலம், ஆப் ஸ்டோர்கள், இணைய உலாவிகள் மற்றும் வீடியோ சேவைகளில் போட்டியாளர்களை வெளியேற்ற கூகுள் தனது ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியுள்ளது என்று கூறி ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளதாக இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், கூகுள் தனது குற்றச்சாட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்றிக்கொள்ளுமாறு இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.