ஒடிசா ரயில் விபத்தில் நிவாரணத்திற்காக தன கணவர் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் பலியான சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் தனது கணவரும் இறந்து விட்டதாக கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண், ஏதோ ஒரு உடலை தனது கணவர் பிஜய் தத்தாவுடையது என அடையாளமும் காட்டியுள்ளார்.
ஆனால் ஆவணங்களைச் சரிபார்த்த போது அவர் கூறியது பொய்யான தகவல் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பிய போதிலும், கீதாஞ்சலியின் கணவர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.
அரசு வழங்கும் நிவாரண பணத்திற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஜய் தத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கீதாஞ்சலி மற்றும் அவரது கணவர் பிஜய் தத்தா இருவரும் கடந்த 13 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணமும், பிரதமர் நரேந்திர மோடி ரூ 2 லட்சம் நிவாரணமும் அறிவித்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…