இடதுசாரிக் கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி, கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பதியில் ஆந்திர அரசு பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலப் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படவில்லை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…