காங்கிரஸ் நிலைப்பாட்டை விவாதிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு.!
மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் குறித்து நிலைப்பாட்டை தீர்மானிக்க 5 மூத்த தலைவர்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மத்திய அரசு பல அவசர சட்டங்களை கொண்டு வருகிறது.
இதுபோன்ற அவசர சட்டங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் நிலைப்பாட்டை தீர்மானிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த குழுவில் , ப.சிதம்பரம், அமர் சிங், கவுரவ் கோகாய், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.