வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

LPG Cylinder

LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளது.

கடந்த மாதம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையானது ரூ.1,960.50 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 காசுகள் குறைந்து ரூ.1930 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  எனவே, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.30 குறைந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிர் தினத்தன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-ஆக இருந்த நிலையில், தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.818.50 விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்