இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய கருத்துக்கள்!
பட்ஜெட் என்பது இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் அடங்கிய தொகுப்பு தான், நிதிநிலை அறிக்கை ஆகும். இந்த நிதிநிலை அறிக்கையானது, அரசின் வருங்கால திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கான நிதியை ஒதுக்கி அதனை திட்டமிட்டபடி செயல்படுத்துவது தான் இந்த நிதிநிலை அறிக்கை ஆகும்.
இந்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பானது, மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் நடைபெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பின் போது, பாதுகாப்பாக இருக்கவும், ரகசியங்கள் வெளியில் கசிய கூடாது என்பதிலும் அரசு தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்துகிறது.
இந்திய நிதி நிலை அறிக்கையானது, முந்தைய ஆண்டையும், நிகழாண்டையும் அடுத்துவரும் ஆண்டையும் கணக்கில் வைத்து தொகுக்கப்படும் அறிக்கை தான் நிதி நிலை அறிக்கை ஆகும்.