பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதுவதாகவும், மீண்டும் தொடர்பு கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21 அன்று ராஜஸ்தான் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் புகாரைப் பெற்றதை அடுத்து இதற்க்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த புகாரில் அக்டோபர் 20 ஆம் தேதி தௌசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறாக பேசியவதாகவும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத பக்தியையும் பிரியங்கா காந்தி இழிவுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் கட்சித் தலைவர்கள் அனில் பலுனி மற்றும் ஓம் பதக் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…