ஜம்மு காஷ்மீருக்கு வந்தது எனது வீட்டுக்கு வந்தது போல உள்ளது – ராகுல் காந்தி!
ஜம்மு காஷ்மீருக்கு வந்தது எனது வீட்டுக்கு வந்தது போல உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கு பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் எனவும், நான் ஒரு காஷ்மீர் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளது எனது வீட்டுக்கு வந்தது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீரிலுள்ள எனது சகோதரர்களுக்கு நான் பல நலத்திட்ட உதவிகளை செய்வேன் என உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் தனது இதயத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சகோதரத்துவத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் உடைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் நான் வேதனைப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.