ஒரு வழியா வந்துருச்சி…கழிவுநீரை சுத்தம் செய்ய ரோபோ ஸ்கேவெஞ்சர்..! கேரளாவில் அறிமுகம்..!

Default Image

கேரளாவில் கழிவுநீரை சுத்தம் செய்ய ரோபோ ஸ்கேவெஞ்சர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோபோ ஸ்கேவெஞ்சர் அறிமுகம்:

கேரளாவின் கோவில் நகரமான குருவாயூரில் கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ரோபோ ஸ்கேவெஞ்சர் (Robotic scavenger) கருவி அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜென்ரோபோடிக்ஸ் (Genrobotics) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பாண்டிகூட் (Bandicoot) என்ற ரோபோடிக் ஸ்கேவெஞ்சர், ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் துப்புரவுத் தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதாளச் சாக்கடைக்குள் நுழைந்து சுத்தம் செய்யும் நடைமுறை படிப்படியாக குறைந்து வருகிறது.

நாட்டிலேயே முதல் மாநிலம் :

தற்பொழுது கேரள மாநில அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள நீர் ஆணையத்தால் (KWA) குருவாயூர் சாக்கடைத் திட்டத்தின் கீழ் பாண்டிகூட் (Bandicoot) என்ற ரோபோடிக் ஸ்கேவெஞ்சர் கருவி சேர்க்கப்பட்டுள்ளது. கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், குருவாயூர் நகராட்சியில் பாண்டிகூட் ரோபோடிக் ஸ்கேவெஞ்சர் கருவியின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாட்டிலேயே பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய ரோபோடிக் ஸ்கேவெஞ்சர்களை பயன்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது என்று அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.

கேரளா பிரைட் (Kerala Pride) :

குருவாயூரில் ரோபோ மூலம் சுத்தம் செய்யும் பணிக்காக கேரள நீர் ஆணையத்தின் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் பாதாள சாக்கடை அமைப்பை நவீனமயமாக்குவது பரவும் தொற்றுநோய்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் கடுமையான சுகாதார சவால்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். சமீபத்தில் கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் ஏற்பாடு செய்த ஹடில் குளோபல் 2022 மாநாட்டில் ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ‘கேரளா பிரைடு’ விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்