வெள்ளை கொடியுடன் வந்து 7 பேரின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவம்!
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் சுட்டு கொல்லப்பட்டனர்.இவர்கள் 7 பேரும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் “பேட்” (border order action) அமைப்பை சார்ந்தவர்கள். இவர்கள் எல்லை பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பை சார்ந்தர்வர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு , இந்திய இராணுவம் அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்ல அனுமதி கொடுத்து உள்ளது.மேலும் வெள்ளை கொடி உடன் வந்து அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்லுமாறு இந்திய இராணுவம் கூறியுள்ளது.
ஆனால் அதற்க்கு பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என இந்திய இராணுவம் கூறியுள்ளது.