பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்திய குடிமகனாக, குடிமகளாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். தற்போதைய கால கட்டங்களில் உணவு வாங்கும் கடையில் இருந்து மருந்து எடுக்கும் மருத்துவமனை வரையிலும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. பெரியவர்களுக்கு ஆதார் அட்டை தற்பொழுது எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் அட்டை எடுப்பது? அப்படி எடுக்க முடியுமா? என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கும்.
ஆனால் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கூட ஆதார் அட்டையை மிக சுலபமாக எடுப்பதற்கான வழிமுறைகளை தற்பொழுது UIDAI கொண்டு வந்துள்ளது.அதன்படி uidai.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் எப்படி எளிமையாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து என்பது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதன்பின்பதாக கெட் ஆதார் எனும் பிரிவின் கீழ் உள்ள புக் அப்பாயின்ட்மெண்ட் என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் உங்களது இருப்பிடம் குறித்த அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து ப்ரோசிடு என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்பாக நியூ ஆதார் எனும் பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் குழந்தையின் பெற்றோர்கள் யாராவது ஒருவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அதில் வரக்கூடிய ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
பின் தனிப்பட்ட விபரங்களை பதிவிட வேண்டும். விவரங்களை சரிபார்த்த பின்பதாக நாம் செல்ல வேண்டிய நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்து, நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நாம் கொடுத்துள்ள அனைத்து தகவல்களும் சரியா என்பதை சரி பார்த்து சமிட் செய்யவேண்டும். அதன் பின் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் மையத்திற்கு ஆன்லைனில் நாம் குறிப்பிட்ட நாளில் செல்ல வண்டும்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…