புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காலனி வழங்கும் காவல்துறை!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காலனி வழங்கும் காவல்துறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் தொடர்ந்து 4-வது ஊரடங்கு உத்தரவு உள்ளது.
இந்நிலையில், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வருகிற நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்ற நிலையில், ஆக்ராவில் வெறும் கால்களில் நடந்து வரும் தொழிலாளர்களுக்கு காலணிகள் இலவசமாக வழங்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.