நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது, மாணவர்களுக்கு எந்த விடுமுறையும் கிடையாது எனவும் தகவல்.
கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே சென்றதால், பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் சில காலங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்க உள்ளதாகவும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை கோடை விடுமுறை குளிர் கால விடுமுறை என எந்த விடுமுறையும் கிடையாது எனவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பல்வேறு விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு கூறி உள்ளது. அதாவது நவம்பர் மாதம் கல்லூரி திறப்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது எனவும், புதிதாக சேர்பவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் நவம்பர் மாதம் வகுப்புகள் துவங்கிய பிறகு 2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி வரைக்கும் அந்த கல்வி ஆண்டு தொடரும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனாவுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிசெய்யும் வகையில் இந்த கல்வி ஆண்டில் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரி கட்டாயம் நடைபெறும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்களும் வாரத்துக்கு ஆறு நாட்கள் நிச்சயம் வகுப்புகள் நடத்தவேண்டும் எனவும் எந்த விடுமுறையும் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் விடுமுறைகள் கிடையாது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…