தோழியின் கழுத்தை நெரித்து கழிவு நீர் குட்டையில் வீசிய கல்லூரி மாணவன்!

Default Image

தன்னுடனான நட்பை முறித்துக் கொண்டதால் தனது தோழியையே கழுத்தை நெரித்து கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசி உள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் எனும் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்மணி தான் அனுஷா. இவர் நரசிம்மராவ் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் அதே கல்லூரியில் ஒன்றாகப் படித்து வரக்கூடிய அனுஷாவின் நண்பர்தான் விஷ்ணுவர்த்தன். இருவரும் இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அனுஷா விஷ்ணு உடனான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரி முடிந்து வீடு திரும்புகையில், ஏன் நட்பை துண்டித்துக் கொள்கிறாய் என விஷ்ணு கேள்வி எழுப்ப, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஷ்ணு அனுஷாவின் கழுத்தை நெரித்து செல்லும் வழியிலேயே கொலை செய்துள்ளார்.

அதன்பின் தான் செய்தது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அருகிலிருந்த கழிவு நீரோடையில் அனுஷாவின் உடலை வீசி விட்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார் விஷ்ணு. கொல்லப்பட்ட விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் உண்மையை விஷ்ணு ஒப்புக் கொண்ட பின்பு தான் வெளியில் அனுஷா உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, விஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுஷாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கே வந்த காவலர்கள் எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவடையாத நிலையில், கொலை குற்றவாளி மீது விசாரணை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு ஒரு வீடும் கொடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் நிதியையும் அறிவித்துள்ளார். தன்னுடனான நட்பை முறித்துக் கொண்டதற்காக பெண்மணியை கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்