திறப்பா???!நவம்பரில் கல்லூரிகள் -விளக்கும் ரமேஷ் பொக்ரியால்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. செப்டம்பர் மாதத்தில், கல்லுாரிகளை திறக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் சற்றும் குறையாததால், இதை செயல்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, இந்த கல்வியாண்டில், குறைந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், கல்லுாரிகளை நடத்துவது பற்றிய பரிந்துரைகளை தெரிவிக்க, வல்லுனர் குழு ஒன்றை யு.ஜி.சி அன்மையில்அமைத்தது.
இந்நிலையில் இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தாவது:
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளை திறப்பது பற்றி, யு.ஜி.சி., அளித்த பரிந்துரையை, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டு உள்ளது. நவ., 1ம் தேதி முதல் கல்லுாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, யு.ஜி.சி., தெரிவித்துள்ள விதிமுறை பின்பற்ற, பல்கலைகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் குறையாத நிலையிலும், ஆந்திரா, அசாம் உட்பட பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை, கடந்த, 21ம் தேதி முதலே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பல மாநிலங்களில், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 5ம் தேதி முதல், 9 – 12 வகுப்பு வரை, பள்ளிகளை முழுமையாக திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தான், கல்லுாரிகளை, நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க, மத்திய அரசு அனுமதியளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)