தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த கலெக்டர்..! குவியும் பாராட்டுகள் ..!
தற்போது உள்ள பெற்றோர்கள் அனைவரும் தனது குழந்தைகளை ஒரு சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தற்போது உள்ள பெற்றோர்கள் மனதில் பதிந்துள்ளது.
தங்களது குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மனதில் இருப்பதால் தான் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அவனிஷ் ஷரன் .
Vedika Sharan’s first school! pic.twitter.com/urA9QpAZt8
— Awanish Sharan (@AwanishSharan) October 13, 2019
தற்போது அவனிஷ் ஷரன் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகளைஅப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டி வருகின்றனர்.