தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்சாரத் துறை அதிகாரிகளை கட்டி வைத்த மக்கள்.
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்சார கட்டணங்களை வசூலிக்க அந்த பகுதிக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது,கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களிடம் எப்படி மின்சார கட்டணம் வசூலிக்கலாம் என அதிகாரிகளிடம் அந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், ஒரு கட்டத்தில் அந்த கிராம மக்களுக்கும் , மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட , கிராம மக்கள் அந்த அதிகாரிகளை கயிறு கொண்டு மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டனர்.
இதுதொடர்பாக மேடக் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், தகவல் அறிந்து நாங்கள் உடனடியாக அந்த சம்பவ இடத்தை அடைந்து அதிகாரிகளை விடுவித்தோம். அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…