காக்னிசன்ட்டின், சிஇஓ ஆக ரவிக்குமார் நியமிப்பு.!
காக்னிசன்ட் நிறுவனம், ரவிக்குமாரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக(சிஇஓ) நியமித்துள்ளது.
மிகப்பெரும் ஐடி(IT) நிறுவனமான காக்னிசன்ட், ரவிக்குமார் ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வாரியத்தின் உறுப்பினராகவும் உடனடியாக நியமித்தது. பிரையன் ஹம்ப்ரிஸ் ஆற்றி வந்த இரு பதவிகளிலும் இருந்து, அவருக்கு பதிலாக ரவிக்குமார், நிறுவனத்தின் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரையன் ஹம்ப்ரிஸ், மார்ச் 15, 2023 வரை நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ரவிக்குமார், இன்ஃபோசிஸில் 20 வருட அனுபவத்துடன் காக்னிசன்ட்டில் சேர்ந்தார். அவர் ஜனவரி 2016 முதல் அக்டோபர் 2022 வரை இன்ஃபோசிஸ் தலைவராகப் பணியாற்றினார்.