நான் எனது தொழிலில் தோற்றுவிட்டேன்! – காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் மாயம்!

Published by
மணிகண்டன்

ஆசியாவிலேயே மிகப்பெரிய காபி தோட்டம் வைத்துள்ள ஒரே நிறுவனம் என பெயர் கொண்டது காபி டே நிறுவனம். இந்த காபி டே உரிமையாளர் தான் காணாமல் போன வி.ஜி.சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணன் அவர்களின் மருமகனாவார்.

இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் வெகுநேரமாக அவர் வராததால், சந்தேகமடைந்த ட்ரைவர் வீட்டிற்கு தகவல் கொடுக்க, பின்னர் அப்பகுதியில் போலீசார் விரைந்தனர்.அந்த பகுதியில் நேத்ராவதி ஆறு இருப்பதாலும், உல்லால் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததை பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியதாலும், அந்த பகுதியில் சுமார் 200 மீட்பு படையினர் அங்கு விரைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரிக்கையில் அவர் எழுதியாக ஓர் கடிதமும்  போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், ‘ கடந்த 37 ஆண்டுகளில் 30 ஆயிரம் நேரடி தொழிலாளர்களை உருவாக்கியுள்ளேன். இருந்தும் எனது தொழிலில் நான் தோற்றுள்ளேன். இதுவரை நான் என்னுடைய முயற்சி அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.

என்மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது கம்பெனியின் பங்குளை வாங்கியிருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் அந்த பங்குகளை வாங்க சொல்லி என்னிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். எனது நண்பரிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளேன் அதனையும் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன்.

எனது கடன்களுக்கு நானே பொறுப்பு. என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என கூறினார். மேலும் , எனது பெயரில் உள்ள சொத்துக்களின் விவரங்களை இதில் இணைத்துள்ளேன் அதனை வைத்து கடன்களை செலுத்துமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் உண்மை தன்மையை தற்போது போலீஸ் தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

7 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

24 minutes ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

1 hour ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

2 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago