#CNG-PNG: நெருங்கும் தேர்தல் – குஜராத்தில் எரிவாயு மீதான வரி குறைப்பு!
குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களின் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வாட் வரி 10% குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், இமாச்சலப்பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பாஜகவுக்கு உதவுவதற்காகவே குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின.
இமாச்சலுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் புதிய திட்டங்கள், சலுகைகளை அறிவிக்க வசதியாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை பாஜக தலைமையிலான அரசு குறைத்துள்ளது. குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை பாஜக தலைமையிலான அரசு குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.