காவிரி மேலாண்மை விவகாரத்தில் காலம் தாழ்த்தினால் மத்திய அரசு விளைவுகளை சந்திக்க நேரிடும்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இதுதொடர்பாக கர்நாடகா மாநில அரசு மழுப்பலாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு முடிவடைய இருப்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஒழுங்காற்று குழு அமைப்பதில் காலம் தாழ்த்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் ராஜாவின் கருத்து ஏற்க முடியாது என்றும் இதற்கு தன் கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவில் பாதி வாங்கினார்கள், பெரியார் விமர்சனத்துக்கு பிறகு அதிலும் பாதிதான் வாங்குவார்கள் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்