மேட்டூர் அணை நீர் குறுவை சாகுபடிக்காக திறக்க முதல்வர் 12 ஆம் தேதி நேரில் செல்கிறார்!
மேட்டூர் அணையிலிருந்து நீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்படுகிறதாம், மேலும், வருகின்ற 12 ஆம் தேதி அதற்காக முதல்வர் நேரில் செல்கிறாராம்.
அண்மையில் தென் மேற்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறுவை சாகுபடி பணிகளும் காவிரி டெல்டா பகுதிகளில் தீவிரமாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 12 ஆம் தேதி காலை 10 மணியளவில் நீர் திறந்துவிடப்படவுள்ளது. மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி நேரில் சென்று திறந்துவிட உள்ளார்.