அமராவதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க முதல்வர் திட்டம்.!
ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் எது என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கினார். ஆனால் அதற்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
அதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற விசாரணையில், நிர்வாக தலைநகரத்தை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதில் தற்போதைய நிலை தொடரும் என்று உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது அமராவதியில் சமீபத்தில் கைவிடப்பட்ட 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம், சட்டமன்றம், நீதிமன்றம், அரசு குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் , விரைவில் அதனை முடித்து அமராவதியை பெருநகரமாக மாற்ற முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.