கேரள படகு விபத்து.! நிவாரண தொகை 10 லட்சமாக உயர்வு.! முதல்வர் அறிவிப்பு.!
படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி தூவல் தீரம் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகானது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ தற்போது ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது .. இந்த குழுவினருடனான ஆலோசனைக்கு பிறகு கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய விசாரணைகுழுவானது விபத்து குறித்த விசாரணை நடத்தும் என குறிப்பிட்டார்.
மேலும் , விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கும் எனவும் , சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவச் செலவை அரசே முழுதாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் கூறினார். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி இறந்தவர்கள் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.