3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிப்பது தொடர்பாக கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றிய பின் பினராயி விஜயன் பேசுகையில், வரலாற்றில் விவசாயிகளால் நடத்தப்பட்ட மிகச் சிறந்த போராட்டங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் “கார்ப்பரேட் சார்புடையவை” என்றும், விவசாயிகள் போராட்டத்தில் குறைந்தது 32 விவசாயிகள் உயிர் இழந்த உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும் அவர் பேசுகையில், “தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் சில சட்டங்களைப் பற்றி மக்கள் கவலைப்படும்போது ஒரு தீவிரமான பார்வையை எடுக்க தார்மீக பொறுப்பு சட்டமன்றங்களுக்கு உள்ளது” .விவசாயம் நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
வேளாண் துறை இன்னும் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மத்திய அரசு சர்ச்சைக்குரிய சட்டங்களை கொண்டு வந்தது.இதன் விளைவாக விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். தற்போதைய ஆதரவு விலையை கூட இழக்க நேரிடும் என்றும் அவர் பேசினார்.