கேரள கிராமத்தில் பிறந்த 21 வயது ஜெனிஜெரோம் தற்போது கேரள இளம் வயது பெண் விமானியாக உயர்ந்ததை எண்ணி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கரக்குளம் கிராமத்தில் பிறந்தவர் ஜெனிஜெரோம். இவரின் பெற்றோர் பியாஸ்ட்ரா, ஜெரோம் ஆவர். ஜெனிஜெரோம் பள்ளிப்பருவத்திலிருந்து தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தது மட்டுமல்லாது அதை நிஜமாகவும் மாற்றியுள்ளார்.
21 வயதான ஜெனிஜெரோம் நேற்று முன்தினம் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் அரேபியா ஜி 9-449 என்ற விமானத்தை திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளார். ஜெனிஜெரோமின் சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இவர் பிறந்த கரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இளம் வயது கேரள விமானிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், கேரளாவின் இளம் வயது விமானியாக சாதனை படைத்த ஜெனிஜெரோமிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் சாதனையை பகிர்வதில் கேரளாவும் மகிழ்ச்சியடைகிறது. இளம் வயது கனவை நனவாக்கிய ஜெனிஜெரோமின் வாழ்க்கை பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மேலும், ஜெனிஜெரோமின் ஆசையை நிறைவேற்ற துணை நின்ற அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். ஜெனிஜெரோம் அவரது வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…