கேரளாவின் இளம் வயது விமானிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்..!

Default Image

கேரள கிராமத்தில் பிறந்த 21 வயது ஜெனிஜெரோம் தற்போது கேரள இளம் வயது பெண் விமானியாக உயர்ந்ததை எண்ணி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கரக்குளம்  கிராமத்தில் பிறந்தவர் ஜெனிஜெரோம்.  இவரின் பெற்றோர் பியாஸ்ட்ரா, ஜெரோம் ஆவர். ஜெனிஜெரோம் பள்ளிப்பருவத்திலிருந்து தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தது மட்டுமல்லாது அதை நிஜமாகவும் மாற்றியுள்ளார்.

21 வயதான ஜெனிஜெரோம் நேற்று முன்தினம் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் அரேபியா ஜி 9-449 என்ற விமானத்தை திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளார். ஜெனிஜெரோமின் சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இவர் பிறந்த கரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளம் வயது கேரள விமானிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், கேரளாவின் இளம் வயது விமானியாக சாதனை படைத்த ஜெனிஜெரோமிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் சாதனையை பகிர்வதில் கேரளாவும் மகிழ்ச்சியடைகிறது. இளம் வயது கனவை நனவாக்கிய ஜெனிஜெரோமின் வாழ்க்கை பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மேலும், ஜெனிஜெரோமின் ஆசையை நிறைவேற்ற துணை நின்ற அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். ஜெனிஜெரோம் அவரது வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்