கிளவுட் சமையலறைகள் : நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும்!

Default Image

நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் தொழிலாக மாறக்கூடும்.

இன்று அதிகமானோர் வீடுகளில் சாப்பிடுவதை விட, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், கொரோனா ஊரடங்கால், அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்த நிலையில், இந்தியர்கள் அதிகமாக, டேக்அவே உணவுகளை தான் விரும்பி சாப்பிட தொடங்கினர்.

இந்நிலையில், வணிக ரீதியான சமையல் வசதிகள் இல்லாத மற்றும் ஆன்லைனில் வைக்கப்படும் டெலிவரி ஆர்டர்களை மட்டுமே பூர்த்தி செய்யும் கிளவுட் சமையலறைகள் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் தொழிலாக மாறும் என்று ரெட்ஸீர் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் தெரிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற  வெளிநடமாட்டங்களை குறைப்பதற்காகவும், தற்போதுள்ள பிராண்டுகள்  இந்த  சமையலறைகளில் விநியோகப்படுத்தப்படுவதாலும்,  இதன் வளர்ச்சியை துரிதப்படுத்தக்கூடியதாக உள்ளது என்றும், மேலும்  கொரோனா ஊரடங்கிற்கு பின்னும் இது நிரந்தரமாக மாறும் என்று இந்தியாவின் நுகர்வோர் தயாரிப்புகள் மற்றும் சில்லறை நடைமுறைகளின் தலைவர் ஜாய்தீப் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்