உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி முதல்வர் பேசுகையில், தேர்வு அறையில் தேர்வு எழுதும்போது நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டு விடை எழுதலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இதையடுத்து அரசு பள்ளி தேர்வு மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான், அதனால் ரூ.100 விடைத்தாளில் வைத்தால் போதும் ஆசிரியர்கள் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்கள் குறைதீர் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து புகார் ஒன்று அளித்துள்ளார். இதைப்பார்த்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் ஆசிரியரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வை புகார் தெரிவித்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…