டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர்.
உடனே துப்பாக்கியை நீட்டிய அந்த திருடர்கள், கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்தனர். அதன் பின், அவர்கள் கொள்ளை அடித்தது தான்தான் என தெரியாமல் இருப்பதற்காக சிசிடிவி ரெக்கார்டரான டிவிஆர் என நினைத்து செட்டாப் பாக்ஸை கையுடன் ஏடுத்து சென்றனர் என காவல் துறை தெரிவித்தது.
இதனையடுத்து, புகாரின் பெயரில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் திருடர்களை பிடிக்கவுள்ளது. டிவிஆருக்கு பதில், செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்றதால் திருடர்களை எளிதாக அடையாளம் கண்டுள்ளோம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…