தூய்மை இந்தியா திட்டத்தில் இளம் நண்பர்களுடன் நான்.., ” பிரதமர் மோடி உற்சாகப் பதிவு.! 

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, புதிய புகைப்படங்களுடன் பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PM Modi tweet about 10 Years Of Swachh Bharat

டெல்லி : கடந்த 2014ஆம் ஆண்டு இதே போல காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா (Swachh Bharat)’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதும் , திறந்தவெளி மலம் கழிப்பதை அகற்றி தூய்மை கழிப்பறைகள் அமைக்கப்படுவதும் , நாட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், #10YearsOfSwachhBharat எனும் ஹேஸ்டேக்கை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பள்ளி மாணவர்களுடன் தூய்மை செய்யும் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

மேலும்,  ” இன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நான் எனது இளம் நண்பர்களுடன் இந்த பகல் நேரத்திலும் தூய்மை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்றேன். தூய்மை இந்தியா திட்டத்தை அனைவரும் வலுப்படுத்திக் கொண்டே இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested