பட்ஜெட்டில் 2 ஆண்டுகளில் 2 கோடி கழிவறைகள்!
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவித்தார்.
2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவர் கூறியதாவது:
ஸ்வச் பாரத் திட்டம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் 2 கோடி கழிவறைகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீண்டகாலமாக இருந்து வரும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சூழல் உருவாக்கப்படும். இந்த திட்டத்துக்காக ஏற்கனவே மத்திய அரசு 6 கோடி கழிவறைகளை கட்டிக்கொடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியை ஊக்கப்படுத்த அதிகபட்ச ஆதரவு விலை தரப்படும். இதற்காக ஆபரேஷன் கிரீன் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதி விவசாயிகள் தங்கள் உற்பத்தியை பெருக்க உதவும். விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கிசான் கிரெட்டி கார்டு, இனி கால்நடை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
நாட்டில் தொழில் செய்வதை எளிதாக்கியதைப் போல், நாட்டில் ஏழைகள் எளிதாக வாழ வசதி செய்தி தரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.