சண்டிகரில் 9 ஆம் வகுப்பு சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றம், தன்னிடம் கல்வி பயின்ற 9 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுற்ற வழக்கில், 28 வயது டியூஷன் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏப்ரல் 2019 இல், டியூஷன் வகுப்பில் வேறு மாணவர் யாரும் இல்லாத போது, அந்த ஆசிரியர் தகாத முறையில் மாணவியிடம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வாயைக் கட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் இது குறித்து யாரிடமாவது கூறினால் அடித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
அந்த சிறுமி பயந்து அமைதியாக இருந்திருக்கிறார், ஆனால், ஒரு மாதம் கழித்து, உடல்நிலை சரியில்லாததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி, கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு டியூஷன் ஆசிரியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்தது.
மே, 2019 இல் காவல் நிலையத்தில் டியூஷன் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மைனர் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான கடுமையான குற்றம் என்று நீதிமன்றம் இதனைக் கடுமையாக கண்டித்தது, இந்த குற்றத்தின் அடிப்படையில் ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ₹30,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…