புதுச்சேரியில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து…! – முதல்வர் ரங்கசாமி
- இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் டூ தேர்வுகள் ரத்து.
- புதுச்சேரியில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.