உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் அனைத்தும் மூடி நிலையில் இருந்தாலும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்பட்டது.
15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு இன்று இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மதியம் ஒரு மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும், இதனை Maharashtraeducation.com, examresults.net/maharashtra, mahresult.nic.in என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.