கர்நாடகாவில் அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு முடிவுகள்.! 100% மதிப்பெண்களை பெற்ற 6 மாணவர்கள்.

கர்நாடகாவில் நேற்றைய தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இடைநிலை கல்வி தேர்வு வாரியம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய தேர்வில் 6 மாணவர்கள் 620/625 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 71.80% பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை விட 1.9% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பெரும்பாலான மாணவர்கள் தங்கள் மூன்றாம் மொழி தேர்வில் 100/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும், 21000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டும் ஆண்களை விட 77.74% பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களின் தேர்ச்சி விகிதம் 66.41% என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025