அதிக சத்தத்தால் மசூதிக்கு வெளியே வெடித்த மோதல்..! 4 பேர் காயம், 45 பேர் கைது..!
மஹாராஷ்டிராவில் மசூதிக்கு வெளியே ஏற்பட்ட அதிக சத்தத்தால் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மசூதியில் நமாஸ் நடந்து கொண்டிருந்தனர் அப்பொழுது மசூதிக்கு வெளியே அதிக இரைச்சலுடன் இசை ஒன்று கேட்டுள்ளது. இதையடுத்து மசூதியில் நமாஸ் செய்துகொண்டிருந்தவர்கள் மற்றும் வெளியே அதிக சத்தத்துடன் இசையை வைத்தவர்கள் என இரு குழுக்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலால் அப்பகுதியில் உள்ள வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோதலை கட்டுப்படுத்தினர். இந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 45 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த மோதல் குறித்து ஜல்கான் காவல் ஆய்வாளர் எம்.ராஜ்குமார், ” தற்பொழுது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுவரை 45 பேரை கைது செய்துள்ளோம். அப்பகுதியில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது.” என்று கூறினார்.