திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்கக் கோரியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த மோதலில் பாஜக எம்எல்ஏ மனோஜ் திக்கா தாக்கப்பட்டார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜும்தாருக்கும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சுபேந்து அதிகாரி, மனோஜ் திக்கா, ஷங்கர் கோஷ், தீபக் பர்மன் மற்றும் நர்ஹரி மஹதோ உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்கள் எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டதாகவும், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் பாஜக தலைவர் சுபேந்து அதிகாரி கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோவை பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதை காணலாம்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…