காத்திருப்போர் பட்டியல் நீக்கமா ? ரயில்வே துறை விளக்கம்

Default Image

ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ,ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. 

அதாவது , 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும், அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை,  தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறுவது குறைக்கப்படும். ரயிலில் உள்ள மொத்த இருக்கைகளை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இருப்பை விட தேவை அதிகமாகும் சமயங்களில் காத்திருப்போர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்