அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது.
அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய அரசியல் சாசன தினம்(அல்லது) இந்திய அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,நவம்பர் 26 ஆம் தேதியான இன்று “நாட்டின் அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில்,71 வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விழாவில் உரை நிகழ்த்த உள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இன்று உரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிலையில்,அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் இந்த விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி,இந்த அழைப்பை ஏற்று திமுக,சிவசேனா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,
February 13, 2025![England Captain Jos Butler - Ravi shastri](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/England-Captain-Jos-Butler-Ravi-shastri.webp)
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)