ஆற்றை கடக்க ஆபத்தான முறையை கையாளும் பொதுமக்கள் !
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில், சன்காஞ் தாலுகாவில் ஒரு சிறிய ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆறு அங்குள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
#WATCH: Villagers in Sonkach Tehsheel of Dewas risk their lives to cross a river in the area. The villagers balance themselves with the help of two ropes tied across the river. #MadhyaPradesh pic.twitter.com/wztJDRb2M5
— ANI (@ANI) July 14, 2019
ஆற்றின் குறுக்கே சரியான பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க மக்கள் ஆபத்தான வழி கடைபிடித்துவருகின்றனர். ஆற்றின் நடுவே இரு கயிற்றை கட்டி அதைப் பிடித்துக்கொண்டு ஒரு புறத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்கின்றன. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.