யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வர்கள் 20 வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நாட்டில் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரச்சினைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் தேர்வு சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் 72 தேர்வு மையங்களில் சுமார் 6 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதயுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் உடல்நிலை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படலாம் எனவே தேர்வை 2-3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று, யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வு மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக செப்டம்பர் 30 தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 4 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போதும் தேர்வு ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சி -க்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…