குடியுரிமை திருத்த சட்டம் : எதிராக வழக்குகளை மாற்ற கோரி மத்திய அரசு வழக்கு

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது.
  • இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நாளை மறுநாள் (ஜனவரி 10 ஆம் தேதி ) வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
stock market budget 2025
nirmala sitharaman and M K Stalin
mkstalin
udit narayan kiss controversy
Gold Rate
shivam dube hardik pandya