மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.இதற்கிடையில் சிவசேனா வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.மேலும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிலையில் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய நாள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்; மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி ,நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது.இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…