குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- இன்றைய நாள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.இதற்கிடையில் சிவசேனா வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.மேலும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிலையில் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய நாள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்; மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி ,நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது.இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)