குடியுரிமை மசோதா எங்களுக்கு பொருந்தாது… நாகலாந்து முதல்வர் அறிவிப்பு…!!
குடியுரிமை மசோதா திருத்த சட்டம் நாகாலாந்து மாநிலத்துக்கு பொருந்தாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள், ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்று குடியுரிமை மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில் முஸ்லீம் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படாது என்று இந்த புதிய மசோதாவில் சட்டா விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு காட்சிகள் எதிர்த்து வந்தன.குறிப்பாக இதற்கு பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் நாகாலாந்தும் மாநிலமும் குடியுரிமை மசோதா சட்டத்தை ஏற்க மறுத்துள்ளது.நாகலாந்து மாநில முதல்வர் முதல்வர் நெய்பியு ரியோ அரசியல் சாசன சட்டப்பிரிவு 371ன் படி நாகலாந்து மாநிலத்துக்கு இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பொருந்தாது என உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.