அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!

Default Image
  • லால் கிருஷ்ண அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்து இந்தியா வந்தவர்கள் தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர்  அமித் ஷா ஆக்ரோசமாக  பேசியுள்ளார்.
  • மாநிலங்களவையில் இன்று அமித் ஷா கடும் விவாதம்.

மக்களவையில் இன்று  மசோதாவை தாக்கல் செய்து  உள்துறை அமைச்சர்  கூறியதாவது குடியுரிமை சட்டம் என்பது  சிறுபான்மையினருக்கு 0.001%  கூட எதிரானது அல்ல.முன்னால் பிரதமர்  இந்திரா காந்தி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து வருவதற்காக 14வது சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி கூறினார். ​​அப்போது ஏன் பாகிஸ்தானை பற்றி எதுவும்  சொல்லவில்லை.இத்தனை ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் இது போன்று வேறு எந்த  நாட்டிலும் இல்லை.

Image result for citizenship bill

அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டில் இதேபோன்றே கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்திய நாட்டின்  அருகே பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் என மூன்று அண்டை நாடுகள் உள்ளன. இவர்களின் நிலப்பகுதியில் இஸ்லாம்தான் அவர்களின் சட்டமாக உள்ளது என்று அந்த அரசியலமைப்பு சட்டங்கள் கூறுகின்றன.ஒன்றினைந்த நாட்டின் பிரிவினையின் போது, ​​சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே நேருவிற்கும் லியாகத்திற்குமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவில் முறையாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்.

Image result for citizenship bill

பாஜக ஒன்றும்  நாட்டை பிளவுபடுத்தவில்லை.இந்த மசோதா முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் என்று கூறவில்லை.ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்தது. இந்த மசோதா நிறைவேறினால் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். அதனால் இந்த மசோதாவை  எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறான செயல். நாடு பிளவு பட்டபோது 1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது.எனவே, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள்  கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக கூட  இருப்பார்கள்.ஏன்  அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான்.என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்