குடியுரிமை சட்ட திருத்தம் : எந்த மதத்தவரும் பாதிக்கப்படமாட்டார்கள் – பிரதமர் மோடி
- நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வடகிழக்கு மாநிலங்களான அசாம்,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் போராட்டங்கள் வேகமெடுத்த நிலையில் பின்னர் டெல்லி,மேற்குவங்கம் என்று போராட்டங்கள் நடைபெற்றது.டெல்லியில் ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.இதன் விளைவாக நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
Violent protests on the Citizenship Amendment Act are unfortunate and deeply distressing.
Debate, discussion and dissent are essential parts of democracy but, never has damage to public property and disturbance of normal life been a part of our ethos.
— Narendra Modi (@narendramodi) December 16, 2019
இந்நிலையில் போராட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்தியாவில் உள்ள எந்த மதத்தவரும் குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்.பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவு செய்வதும் நமது பண்பாடு அல்ல.மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வன்முறை வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.